₹1,200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்!
சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய நிர்வாக வளாகம் ₹1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய நிர்வாக வளாகம் ₹1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல், பசுமைக் கட்டட தரநிலைகள், வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் இடம்பெறும். அரசுத் துறைகள் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தற்போது எதிர்கொள்ளும் நிதிச்சுமையில் இந்த அறிவிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கருத்துகளைப் பகிருங்கள்.
ஆதாரம்
- தமிழ்நாடு சட்டப்பேரவை – விதி 110 அறிவிப்பு