2 மாதங்களாகத் தண்ணீர் இல்லை: காலிக் குடங்களுடன் மக்கள் போராட்டம்!
செங்கல்பட்டு அரைப்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் நின்றுவிட்டதாக மக்கள் புகார்.
செங்கல்பட்டு அரைப்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் நின்றுவிட்டதாக மக்கள் புகார். 7 தெருக்களைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; குடிநீரை விலைக்கு வாங்கவும், பல கிலோமீட்டர் சென்று சேகரிக்கவும் வேண்டிய நிலை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், சீரான குடிநீர் விநியோகத்துடன் நிரந்தரத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தினர்.