“விவசாய நிலத்தைத்தான் எடுக்கணும்”
ஓசூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலம் வேண்டாம் என அதிமுக எம்எல்ஏ; அமைச்சர் செங்கோட்டையன் வேறு வழி இல்லை என்கிறார்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியுள்ளார். பரந்தூர் போல ஓசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும் என்றார். அமைச்சர் செங்கோட்டையன் இதற்கு மாறாக, எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் எடுக்க வேண்டும்; வேறு வழி கிடையாது எனக் கூறியுள்ளார்.