நகரம் & பொது EN
நடத்துநர் பணியிடங்கள் உ.பி. நிறுவனத்திற்கு டெண்டர்?

நகரம் & பொது

நடத்துநர் பணியிடங்கள் உ.பி. நிறுவனத்திற்கு டெண்டர்?

எஸ்.எஸ். எண்டர்பிரைசஸுக்கு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் பணிக்கு ஆட்களை வழங்கும் டெண்டரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் பெற்றுள்ளது. முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான நடத்துனர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் வெளிமாநில நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செல்வது அதிர்ச்சி என்கின்றனர். ஒப்பந்த நியமனத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டு சமூக நீதி சீர்குலையும்; நிரந்தரப் பணியிடங்கள் ஒப்பந்தமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதாரம்

  • ஊடக அறிக்கைகள்
Union Pulse · @union.pulse RSS