70 வயதைக் கடந்த 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு!
அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
🏥 அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
70 வயதைக் கடந்த சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பின்றி பயன்பெறலாம். அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை கிடைக்கும். புற்றுநோய், இதய சிகிச்சை, உறுப்பு மாற்று உள்ளிட்ட உயர்சிகிச்சைகள் இடம்பெறும். காப்பீட்டுத் தொகை மற்றும் விண்ணப்ப முறை உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியாகும்.
ஆதாரம்
- தமிழ்நாடு சட்டப்பேரவை