அமைச்சர்களுக்கு தமிழை சரியாகக் கூட உச்சரிக்க தெரியவில்லை: நயினார் நாகேந்திரன்
அமைச்சர்களுக்குத் தமிழைச் சரியாக உச்சரிக்கக்கூட தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
அமைச்சர்களுக்குத் தமிழைச் சரியாக உச்சரிக்கக்கூட தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி இல்லங்கள் என்பதை இலக்கங்கள் என்று வாசித்ததாகச் சுட்டிக்காட்டினார். மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முதல்வருக்கு எண்ணமே இல்லை என்றும், தஞ்சாவூரில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி இல்லை என்றும் கூறி விவசாயிகளுக்கு நிதி தருவாரா எனக் கேட்டார். பூலித்தேவன் நினைவு தபால்தலை அடுத்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என்றார்.