ஆவினுக்கு பால் நிறுத்தம்?
வாக்குறுதி ₹44, அறிவிப்பு ₹41 - ஆகஸ்ட் 24 முதல் நிறுத்தம்.
தவெக தேர்தல் அறிக்கையில் ஆவின் பால் கொள்முதல் விலையை ₹38-லிருந்து ₹44-ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது லிட்டருக்கு ₹3 உயர்த்தி ₹41 என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பிடித்தத்துக்குப் பிறகு உற்பத்தியாளர்களுக்கு ₹1.25 மட்டுமே கூடுதலாகக் கிடைப்பதாகச் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது. வாக்குறுதிப்படி ₹44 வழங்காவிட்டால் ஆகஸ்ட் 24 முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.