கழிவுநீர் பிரச்னை: முதல்வர் அலுவலகம் முற்றுகை!
கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் தேங்குவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்குவதாக மக்கள் குற்றம்சாட்டினர். 15 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் கழிவுநீரை மிதித்தே வீடு செல்வதாகவும், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என 60-க்கும் மேற்பட்ட பெண்கள் முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆதாரம்
- தினமணி / news reports